நடிகர்கள் அக்க்ஷய்குமார், ரன்வீர் சிங், அஜய் தேவ்கன் நடித்துள்ள படம் ’சூர்யவன்ஷி’. ரோகித் ஷெட்டி இயக்கியுள்ள இப்படத்தை தர்மா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. த்ரில்லர் காப் ஸ்டோரியாக உருவாகியுள்ள இப்படத்தில் நாயகியாக நடிகை கத்ரீனா கைஃப் நடித்துள்ளார்.
அதிரடி ஆக்ஷன் காட்சிகள், கார் ரேஸ் என்று விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இந்தியன் மார்வெல்லாக உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
கரோனா தொற்று பரவல் காரணமாக இப்படத்தின் வெளியீட்டு தேதி பல முறை தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நவம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
முன்னதாக இப்படம் திரையரங்குகளில் 2020 ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்து. ஆனால் அப்போது கரோனா பரவலின் முதல் அலை காரணமாக இந்தியா முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'போலீஸ் நம்ம பின்னால் ஓடாமல், நம்மோடு ஓடிவருகிறது' - 'சூர்யவன்ஷி' அக்ஷய் குமார்