தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

என்னை காதலியுடன் சேர்த்து வையுங்கள் சோனு...கோரிக்கை வைத்த ரசிகர்! - சோனு சூட்டின் உதவி

பிகாரில் இருக்கும் தனது காதலியுடன் சேர்த்து வைக்குமாறு ரசிகர் ஒருவர் நடிகர் சோனு சூட்டுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Sonu Sood
Sonu Sood

By

Published : May 28, 2020, 10:00 AM IST

கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், மும்பையில் வேலைசெய்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பலர் வேலையிழந்து, உணவு உறைவிடமின்றி திண்டாடினர். இவர்களைப் பார்த்து மனம் வருந்திய சோனு சூட், அண்டை மாநில அரசுகளுடன் பேசி தன் சொந்த செலவில் சிறப்புப் பேருந்துகள் மூலம் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்து வருகிறார்.

இந்நிலையில், ரசிகர் ஒருவர் சோனு சூட்டுக்கு ட்விட்டர் வாயிலாக, சகோதரே பிகாரில் இருக்கும் என் காதலியுடன் சேர்த்து வைக்க உதவுங்கள் என கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

அதற்கு சோனு சூட், உண்மையான உங்கள் காதலுக்கு இது ஒரு சோதனையாக இருக்கும். எனவே சில நாள்கள் ஒதுங்கி இருக்க முயற்சி செய்யுங்கள் சகோதரரே என பதில் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்ப உதவும் பிரபல நடிகர் - பாராட்டும் திரைத்துறையினர்

ABOUT THE AUTHOR

...view details