தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பணம் பறிப்பு - கொதித்த சோனு! - sonu sood on impostors

மும்பை: குடிபெயர்ந்த தொழிலாளர்களிடம் தனது பெயரில் யாராவது பணம் கேட்டால் அவர்களை பற்றி காவல் துறையினரிடம் புகார் அளிக்குமாறு நடிகர் சோனு சூட் கூறியுள்ளார்.

சோனு சூட்
சோனு சூட்

By

Published : Jun 5, 2020, 6:50 PM IST

பாலிவுட் நடிகர் சோனு சூட் தேசிய ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி செய்துவருகிறார். இந்நிலையில் குடிபெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து சோனு சூட் பெயரில் சிலர் பணம் பறிப்பதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து சோனு சூட் தனது சமூக வலைதள பக்கத்தில் நாங்கள் இந்த சேவைகளை குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்குகிறோம். எனது பெயரில் யாராவது உங்களிடம் பணம் கேட்டால், அவர்களுக்கு பணம் அளிக்க வேண்டாம். அவரைப் பற்றி எங்களுக்கோ அல்லது காவல் துறையினருக்கோ புகார் அளியுங்கள். சிலர் தங்கள் தேவையை இந்த நேரத்தில் பூர்த்தி செய்ய முயற்சிக்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.

சமீபத்தில் மும்பையை தாக்கிய நிசர்கா புயல் தாக்கும் முன், சோனுவும் அவரது குழுவினரும் கடலோரப் பகுதிகளில் வசித்து வந்த 28 ஆயிரம் பேருக்கு உணவு விநியோகித்து அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது..

ABOUT THE AUTHOR

...view details