தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கரோனா தொற்று உறுதி; மனநிலை அதை விட உறுதி - சோனு சூட் - சோனுசூட் லேட்டஸ் செய்திகள்

மும்பை: நடிகர் சோனு சூட்டுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Sonu Sood
Sonu Sood

By

Published : Apr 17, 2021, 4:44 PM IST

கரோனா பொதுமுடக்கம் காரணமாக பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி தவித்த புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அவரவர் சொந்த ஊர் திரும்ப போக்குவரத்து வசதி செய்து கொடுத்தவர் நடிகர் சோனு சூட். அதனைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

கரோனா காலத்தில் மக்களுக்கு உதவிய நிகழ்வு குறித்து புத்தகம் ஒன்றை சோனு சூட்வெளியிட்டிருந்தார். பின்னர் வழக்கம் போல் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில், சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா' படப்பிடிப்பில் கலந்துகொண்ட சோனு சூட் சைக்கிளிங் சென்றார். அப்போது வெளியான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, " கோவிட் தொற்று உறுதி. மன நிலை அதை விட உறுதியாக இருக்கிறது. இன்று காலை எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நான் ஏற்கனவே தனிமைப்படுத்திக்க கொண்டு விட்டேன். அதிக அக்கறையோடு இருக்கிறேன். ஆனால் கவலை வேண்டாம். உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க எனக்கு இது அதிக நேரத்தைத் தந்துள்ளது. உங்களுக்காக நான் என்றும் இருப்பேன் என்பதை மறக்காதீர்கள்" என பதிவிட்டுள்ளார். சமீபத்தில் தான் சோனுசூட் முதல் தவணை கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details