தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் சோனு சூட் - அப்புறம் பயந்து தொழிலாளர்களும் சோனு சூட்

மும்பை: குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு நொய்டாவில் வேலையும், தங்குமிடமும் வழங்குவதாக நடிகர் சோனு சூட் அறிவித்துள்ளார்.

சோனு சூட்
சோனு சூட்

By

Published : Aug 25, 2020, 1:33 AM IST

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப் படங்களில் வில்லனாகவும், துணை வேடங்களிலும் நடித்து அசத்தியவர் சோனு சூட். இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஏழை, எளிய மக்களுக்கு அவ்வப்போது உதவி செய்து வருகிறார்.

அதற்குச் சரியான உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், கரோனா ஊரடங்கு காலத்தில் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல, களத்தில் இறங்கி உதவி செய்தார். மேலும், வேலையில்லாமல் தவிக்கும் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்காக தனது சொந்தச் செலவில், 'பிரவாசி ரோஜ்கர்' என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளார்.

இச்செயலியின் மூலம் மூன்று லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளார். தற்போது இந்த செயலின் மூலம் நொய்டாவில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனத்தில் 20 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதுகுறித்து சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில், 'குடிபெயர்ந்த 20 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் நொய்டாவில் உள்ள ஆடை நிறுவனத்தில் பிரவாசி ரோஜ்கர் மூலம் வேலை வழங்கப்பட்டுள்ளது. NAEC தலைவர் ஸ்ரீ லலித் துக்ரலின் ஆதரவோடு, இந்த வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. தொழிலாளர்கள் சுகாதாரமான தங்குமிடத்தில் வைக்கப்படுவார்கள்' என்று பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details