ரசிகர்களே எச்சரிக்கை!
பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் அண்மையில் இங்கிலாந்து நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டிந்தார். லண்டன் நகரில் தான் பயணிப்பதற்காக ஊபர் நிறுவனத்தின் கால் டாக்ஸி சேவையை சோனம் பயன்படுத்தியுள்ளார்.
அந்தக் கால் டாக்ஸியில் பயணித்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தன்னைப் பின்தொடரும் 12.8 மில்லியன் (ஒரு கோடியே 20 லட்சத்து 80 ஆயிரம்) ரசிகர்களும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
சோனமின் பயங்கர அனுபவம்
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள சோனம், 'நண்பர்களே ஊபர் லண்டனுடன் எனக்குப் பயங்கரமான அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. தயவுசெய்து பாதுகாப்புடன் இருங்கள். உள்ளூர் பொது போக்குவரத்து அல்லது பாதுகாப்பான கால் டாக்ஸி வாகனங்களைப் பயன்படுத்துவதே சிறந்தது; பாதுகாப்பானது. நான் அதிர்ச்சியடைந்தேன்' எனப் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் சோனமிடம் ரசிகர்கள் கேள்வியெழுப்பியதை அடுத்து அதற்குப் பதிலளித்த அவர், தான் பயணம் செய்த டாக்ஸியின் ஓட்டுநர் மிகவும் கடிந்து நடந்துகொண்டதாகவும், தன்னைப் பார்த்து திட்டிப் பேசியதால் அதிர்ச்சியடைந்தாகவும் பதிவிட்டிருக்கிறார்.