தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கேக் வெட்டி படப்பிடிப்பை முடித்த 'பாகி 3' டீம் - பாகி 3 பட ஷுட்டிங் நிறைவு

'பாகி' பட வரிசையில் இரண்டாவது முறையாக கதாநாயகியாக நடித்துள்ள ஷ்ரத்தா கபூர் பாகி 3 படப்பிடிப்பின் இறுதிநாளில் படக்குழுவினரோடு இணைந்து கேக் வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Baaghi 3 movie wrapped up
Baaghi 3 movie team

By

Published : Jan 30, 2020, 11:58 PM IST

மும்பை: 'பாகி 3' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை படக்குழுவினர் முடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட ஷ்ரத்தா கபூர், படக்குழுவினர் அனைவருடனும் இணைந்து கேக் வெட்டினார்.

இந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அவர், 'பாகி 3' படப்பிடிப்பின் கடைசி நாள். அழகான, அன்பான படக்குழுவுடன் அற்புதமாக நேரம் கழிந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படத்தில் ஷ்ரத்தா கபூருடன், படத்தின் நாயகன் டைகர் ஷெராஃப், ரித்தேஷ் தேஷ்முக் உள்ளிட்டோரும் இருக்கின்றனர்.

மும்பை, ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்தது.

அகமத் கான் இயக்கத்தில் ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் உருவாகி வரும் 'பாகி 3' வரும் மார்ச் 6ஆம் தேதி திரைக்கு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details