தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இதுதான் உண்மையான போதை - கங்கனா ரணாவத் - படப்பிடிப்புக்கு திரும்பியுள்ளது குறித்து கங்கனா ரணாவத்

டெல்லி : மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்பியுள்ள கங்கனா ரணாவத், ’இது தான் உண்மையான போதை’ என ட்வீட் செய்துள்ளார்.

Kangana Ranaut
Kangana Ranaut

By

Published : Sep 16, 2020, 1:48 PM IST

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரணாவத். இவர் தமிழில் ’தாம்தூம்’ திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவர்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தைத் தொடர்ந்து, மீண்டும் பாலிவுட் திரையுலகில் வாரிசுகள் செலுத்தும் ஆதிக்கம் குறித்து பேசத் தொடங்கிய கங்கனா, சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், தற்போது அவர் மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்பியுள்ளதை அடுத்து ’இதுதான் உண்மையான போதை’ என்று ட்வீட் செய்துள்ளார்.

இது குறித்து கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில், "மீண்டும் படப்பிடிப்பிற்குத் திரும்பியுள்ளது உண்மையான போதை. ஒரு மாற்று உலகத்தை உண்மை என இந்த விளக்குகளும் கேமராவும்நம்ப வைக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக மும்பையை ’பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ என்று கங்கனா விமர்சித்திருந்தார். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிர அரசுக்கும் கங்கனா ரணாவத்திற்கும் இடையேயான மோதல் முற்றியது.

மும்பையிலுள்ள கங்கனா ரணாவத்தின் பங்களாவில் உள்ள அலுவலகப் பகுதி விதிகளை மீறிக் கட்டப்பட்டதாகக் கூறப்பட்டு மும்பை மாநகராட்சியால் இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புசான் சர்வதேச திரைப்பட விழாவில் ‘மட்டோ கி சைக்கள்’

ABOUT THE AUTHOR

...view details