தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

காஷ்மீர் அரசியலை தோலுரிக்கும் 'ஷிகாரா'

காஷ்மீரில் நடக்கும் அரசியல், வன்முறை, பயங்கரவாதம் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள விது வினோத் சோப்ராவின் 'ஷிகாரா' திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

shikara
shikara

By

Published : Jan 9, 2020, 9:48 AM IST

காஷ்மீரில் நடக்கும் அரசியல், பயங்கரவாதம், சீர்குலைந்த குடும்பங்கள் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் 'ஷிகாரா: தி அன்டோல்டு ஸ்டோரி ஆஃப் காஷ்மீரி பண்டிட்'.

பாலிவுட் இயக்குநர் விது வினோத் சோப்ரா 13 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கும் இந்தப்படம் 1989இல் காஷ்மீரில் நடந்த இன அழிப்பு, கலவரம், சமீபத்தில் காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி அளித்துவந்த சட்டப்பிரிவு 370 நீக்கம் உள்ளிட்ட பல பிரச்னைகளைப் பேசும் படமாக அமைந்துள்ளது.

ஆதில் கான், சதியா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தை வினோத் சோப்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. பாடல்களுக்கு சந்தோஷ் சந்தில்யா, அபய் சோபோரி இசையமைத்துள்ளனர். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் பின்னணி இசையமைத்துள்ளார்.

இந்தப்படம் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதன் 2 நிமிட டிரெய்லர் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா கடந்த தினம் மும்பையில் நடைபெற்றது.

'ஷிகாரா' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஏ.ஆர். ரஹ்மான் விழாவை சிறப்பிக்கும் வகையில் விழா மேடையில் தனது குழுவினருடன் இசையமைத்து அசத்தினார். 'ஷிகாரா' இசைக்குழுவின் நேரலை இசையமைப்பு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இதையும் படிங்க...

ரஜினியின் 'தர்பார்' - ஆரவாரமாகக் கொண்டாடும் ரசிகர் படை

ABOUT THE AUTHOR

...view details