தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சரோஜ் கானின் ஒவ்வொரு நடன அசைவிலும் ஒரு உணர்ச்சி - நினைவுகூரிய சைஃப் அலிகான் - சரோஜ் கான் மறைவு

மும்பை : மறைந்த நடன இயக்குநர் சரோஜ் கான் உடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து நடிகர் சைஃப் அலிகான் பகிர்ந்துள்ளார்.

சைஃப் அலிகான்
சைஃப் அலிகான்

By

Published : Jul 5, 2020, 1:45 PM IST

மூன்று முறை தேசிய விருது பெற்ற நடனக் கலைஞரான சரோஜ் கான் மாரடைப்பு காரணமாக ஜூலை மூன்றாம் தேதி உயிரிழந்தார். 71 வயது நிரம்பிய இவர் பல இந்தித் திரைப்படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சைஃப் அலிகான் அவருடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.

“சரோஜ் கான் மிகச் சிறந்த, மிகவும் கலை நயமிக்க நடனக் கலைஞர். அவரது ஒவ்வொரு நடன அசைவிலும் ஒரு உணர்ச்சி இருக்கும். அமிதாப் பச்சன், ஸ்ரீதேவி, உள்ளிட்ட பலரை பிரபலங்களாக மாற்றிய பெருமை சரோஜ் கானுக்கு உண்டு. அவரிடம் பணியாற்றியது எங்களுக்கு மிகவும் பெருமை. அவரைப் பற்றி நினைக்காமல் நாம் இந்திப் பாடல்களை கேட்க முடியாது.

ருக் கான், மாதுரி தீட்சித் உள்ளிட்டவர்களின் சாதனையிலும் சரோஜ் கான் முக்கியப் பங்கு வகித்துள்ளார். ஒரு முறை எனது படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றுக்கு நான் நடனமாடும் போது என் முழங்காலுக்குக் கீழ் ரத்தம் வந்தது. அப்போது இது குறித்து நான் சரோஜ் கானுக்கு தெரிவித்தேன்.

சரோஜ் கான், சைஃப் அலிகான்

அதைப் பார்த்த அவர், ”பயப்படாதீர்கள். இந்த ரத்தம் உங்களை உயர்வான இடத்திற்கு கொண்டு செல்லும்” எனக் கூறினார்.

படப்பிடிப்பு தளத்தில் அவர் எப்போதும் சுறுசுறுப்புடன் காணப்படுவார். அவர் மனதில் நினைத்த நடன அசைவுகள் நடிகர்களிடமிருந்து வரவில்லை என்றால், தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருப்பார். ஒருபோதும் அதில் இருந்து பின் வாங்க மாட்டார். அது தான் சரோஜ் கானின் பாணி” என சைஃப் அலிகான் தெரிவித்துள்ளார்.

மாதுரி தீட்சித்தின் ’ஏக் தோ தீன்’, ஸ்ரீதேவியின் ’ஹவா ஹவா’ உள்ளிட்ட பிரபல நடனம் சார்ந்த இந்திப் பாடல்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியவர் சரோஜ் கான் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details