தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பாலிவுட்டை விட்டு விலக சுஷாந்த் பட நடிகை முடிவு?

சுஷாந்துடன் தில் பெச்சாரா திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை சஞ்சனா, டெல்லியில் இருந்து சுஷாந்த் விசாரணைக்காக மும்பை வந்துள்ளார். மீண்டும் டெல்லி புறப்பட்ட சஞ்சனா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவால் அவர் பாலிவுட்டை விட்டு விலகுகிறாரா என குழப்பம் ஏற்பட்டுள்ளது.

sanjana sanghi instagram post on heading back to delhi
sanjana sanghi instagram post on heading back to delhi

By

Published : Jul 2, 2020, 1:34 PM IST

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் தில் பெச்சாரா. அவரது கடைசி படமான இதில் அவருக்கு ஜோடியாக சஞ்சனா சங்கி நடித்துள்ளார்.

இந்தப் படம், சுஷாந்த் மரணத்துக்குப் பிறகு வெளியாக உள்ளது. இந்நிலையில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள சஞ்சனா சங்கியிடம் காவல்துறையினர் 7 மணி நேரமாக விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணைக்காக சஞ்சனா டெல்லியில் இருந்து மும்பை வந்தார். விசாரணை முடிந்தப் பிறகு மீண்டும் நேற்று (ஜுலை 1) டெல்லிக்கு புறப்பட்டார்.

இதற்கிடையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சஞ்சனா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மும்பை விமான நிலையத்தில் நின்றுகொண்டிருக்கும் தனது புகைப்படத்தை பகிர்ந்து, "குட்பை மும்பை, நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் உன்னை சந்தித்தேன். இப்போது நான் மீண்டும் டெல்லிக்கு திரும்புகிறேன். உன் சாலைகள் வித்தியாசமாக இருந்தது. வெறிச்சோடி கிடந்தது. என் இதயத்தின் சோகம் என் பார்வையை மாற்றியுள்ளது, அல்லது நீயும் சோகமாய் இருக்கிறாயோ என்னவோ. சீக்கிரம் சந்திப்போம், அல்லது சந்திக்காமல் கூட போகலாம்" என கூறியுள்ளார்.

சஞ்சனா சங்கி

அவரின் 'சந்திக்காமல் கூட போகலாம்' என்ற சொல்லால் பலரும் பாலிவுட்டை விட்டு சஞ்சனா விலகுகிறாரா என்று குழப்பமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க... 'காலம் காயங்களை மறக்க செய்யும் என்பது பொய்'- சுஷாந்த் பட நாயகி உருக்கம்

ABOUT THE AUTHOR

...view details