பணய கைதியை மையப்படுத்தி கனிஷ்க் வர்மா இயக்கியிருக்கும் திரைப்படம் 'சனக்'. இந்தப் படத்தில் வித்யுத் ஜாம்வால், நடிகைகள் ருக்மணி மைத்ரா, நேகா துபியா, சந்தன ராய், சான்யல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா, ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து பிரமாண்டமான ஆக்ஷன் என்டர்டெய்னர் படமாக 'சனக்' திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
'சனக்' திரைப்படம் நேரடியாக டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அதில், பணயக் கைதியின் திக் திக் நிமிடங்கள், தனது நேசத்துக்குரியவரைக் காப்பாற்ற படத்தின் நாயகன் போராடும் காட்சிகள், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் என ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சனக் படமாக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
வித்யுத் ஜாம்வால் தமிழில் 'பில்லா 2', 'துப்பாக்கி', 'அஞ்சான்' ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தல, தளபதி வில்லனுடன் ஸ்ருதிஹாசனின் ரொமாண்டிக் பாடல்