நடிகர் சல்மான் கான் இயக்குநர் பிரபு தேவா இயகத்தில் 'தபாங் 3' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த வருட டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
இந்நிலையில், சல்மான்கான் தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சாட்டையால் அடித்துக்கொண்டு சாகசம் செய்வர்களை சந்தித்துள்ளார்.
அப்போது அவர்களிடம் சாட்டையை வாங்கி தனது உடம்பில் ஒங்கி அடித்துக்கொண்டுள்ளார். மேலும் அவர்களின் வலியை உணர்ந்துகொள்வதிலும் பகிர்ந்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன். மேலும் இதை யாரும் செய்து பார்க்காதீர்கள். யார் மீதும் செய்தும் பார்க்காதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
பொதுவே சல்மான் கான், தான் நட்சத்திரம் என்பதை மறந்து அனைவரிடமும் அன்பாகவும் மனிதாபிமானத்துடனும் நடந்துக்கொள்வார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதற்கு இந்த வீடியோவும் இப்போது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துத் தொிவித்தும், பாராட்டியும் வருகின்றனர். அதே வேலையில் சிலர் சல்மான் கான் இப்படி வருத்திக்கொள்ளவேண்டாம் என்று வருத்தம் தெரிவித்தும் உள்ளனர்.