மும்பை: ராவணனை புனிதப்படுத்தும் விதமாக ஆதிபுருஷ் படத்தின் காட்சியமைப்பு இருக்கிறது என தான் சொன்ன வார்த்தையை திரும்பப் பெறுவதாக சைஃப் அலி கான் தெரிவித்துள்ளார்.
ஆதிபுருஷ் விவகாரம்: மன்னிப்பு கேட்ட சைஃப் அலி கான் - saif ali khan hurt sentiments
இந்தப் படத்தில் வரும் காட்சி ராவணனை புனிதப்படுத்தும் விதமாக உள்ளது என சமீபத்தில் சைஃப் அலி கான் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு ட்விட்டரில் கடுமையான எதிர்ப்பு எழவும், தனது கருத்தை திரும்பப் பெற்றதோடு, மன்னிப்பும் கேட்டுள்ளார்.
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், சைஃப் அலி கான் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவரும் படம் ஆதிபுருஷ். இந்தப் படத்தில் வரும் காட்சி ராவணனை புனிதப்படுத்தும் விதமாக உள்ளது என சமீபத்தில் சைஃப் அலி கான் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு ட்விட்டரில் கடுமையான எதிர்ப்பு எழவும், தனது கருத்தை திரும்பப் பெற்றதோடு, மன்னிப்பும் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர், நான் சொன்ன கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதை அறிய முடிகிறது. யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்பது என் எண்ணமல்ல. எனவே, நான் தெரிவித்த கருத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு, வருத்தத்துக்கு மன்னிப்பு கோருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.