தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பரிந்துரைக்கப்படாத மாத்திரைகளை சுஷாந்துக்கு கொடுத்தாரா ரியா- உடற் பயிற்சியாளர் பகீர் தகவல் - சுஷாந்த் உடல் பயிற்சியாளர் பகீர் தகவல்

சுஷாந்துக்கு மருத்துவ ஆலோசனை மேற்கொள்ளாமல், மருத்துவர் பரிந்துரைக்கப்படாத மருந்துகளை நடிகை ரியா கொடுத்தார் என சுஷாந்தின் உடற் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

Rhea administered psychotropic drugs to Sushant  reveals his personal trainer
Rhea administered psychotropic drugs to Sushant reveals his personal trainer

By

Published : Aug 1, 2020, 11:02 AM IST

Updated : Aug 1, 2020, 11:11 AM IST

நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம்தான் தற்போது பாலிவுட்டில் பரவலாகப் பேசப்பட்டு வரும் செய்தி. இது தற்கொலையா அல்லது திட்டமிட்ட படுகொலையா என்று பலரும் கேள்வி எழுப்பிவரும் நிலையில் பலரும் இது கொலை என்றும் இதில் சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திவருகின்றனர்.

இந்நிலையில் சுஷாந்தின் ஜிம் பயிற்சியாளர் அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார். சமி அஹமத் என்னும் அந்தப் பயிற்சியாளர், ரியா சக்கரபோர்த்தியுடன் நெருக்க ஆரம்பித்ததிலிருந்தே சுஷாந்த் வாழ்க்கையில் பல விஷயங்கள் மாறத் தொடங்கின என்று தெரிவித்தார்.

மருத்துவர்கள் பரிந்துரைக்காத மாத்திரைகளை சுஷாந்த் எடுத்துக்கொண்டதாகவும் அவை வலுக்கட்டாயமாக சுஷாந்துக்கு கொடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அந்த மாத்திரைகளை நடிகையும் சுஷாந்தின் காதலியுமான ரியா சக்கரபோர்த்தி கொடுத்ததாகவும் சமி அஹமத் தெரிவித்தார்.

"மருத்துவர் கொடுக்கும் மருந்துகள் என்னவென்று யாருக்கும் தெரியாது. அந்த மருந்துகளை கொடுப்பதற்கு முன்னர் அந்த மருத்துவர் மன அழுத்தத்திற்கான அலோசனையை ( Counselling ) சுஷாந்திடம் மேற்கொண்டாரா? மருந்துகளை பரிந்துரைப்பதற்கு முன்னால் நீங்கள் மன அழுத்த ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் அல்லவா. மருத்துவ ஆலோசனை குறித்து மருத்துவருக்கு தெரியவில்லை என்றால், சுஷாந்தின் மன அழுத்தத்துக்கான காரணம் என்னவென்று அவருக்கு எப்படி தெரியும்?, பிறகு எப்படி மருந்துகளை பரிந்துரைக்கமுடியும்?" என அஹமத் கேள்வி எழுப்பினார்.

மேலும் சுஷாந்த் நல்ல உடல் நிலையில் இருந்ததாகவும், அவருக்கு எந்த விதமான மருந்துகளும் தேவையில்லை எனவும் குறிப்பிட்டார்.

"இந்த மருந்து விஷயத்தில் நான் தலையிட ரியா என்னை அனுமதிக்கவில்லை. நான் அந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என சுஷாந்தை அறிவுறித்தினேன். அவரும் அதனை உட்கொள்ளமாட்டார். எனினும் அவரை மருந்தை எடுத்துக்கொள்ள வற்புறுத்தினார்கள்" எனவும் அஹமத் கூறினார்.

சுஷாந்தின் உடல் பயிற்சியாளர் தெரிவித்த இந்தத் தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது ரியா நிதி மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.

இதையும் படிங்க...சுஷாந்த் சிங் மரணம்: சுப்பிரமணியன் சுவாமி புதிய கேள்வி

Last Updated : Aug 1, 2020, 11:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details