தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அனைத்தையும் இழந்துவிடுவேன் என பயந்தேன் - ரெமோ மனைவி லிசெலி - remo wife lizelle weight loss journey

என் உடல்நலன் மீது எனக்கே அக்கறை இல்லையோ என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. அனைத்தையும் இழந்துவிடுவேன் என தோன்றியது என தனது உடல் எடை குறைக்கும் பயணம் குறித்து லிசெலி தெரிவித்துள்ளார்.

Remo D'Souza's wife
Remo D'Souza's wife

By

Published : Sep 28, 2021, 10:03 PM IST

ஹைதராபாத்: நடன அமைப்பாளர் ரெமோவின் மனைவி லிசெலி, தனது உடல் எடையை குறைத்த பயணம் குறித்து பகிர்ந்துள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் ரெமோ தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது மனைவியின் கொலேஜ் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். உடல் எடையுடன் இருந்த லிசெலி, பின்னர் மெலிந்த புகைப்படங்கள் அதில் இருந்தன. 2018ஆம் ஆண்டு முதல் லிசெலி இந்த முயற்சியை மேற்கொண்டதாக ரெமோ தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து லிசெலி, என் உடல்நலன் மீது எனக்கே அக்கறை இல்லையோ என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. அனைத்தையும் இழந்துவிடுவேன் என தோன்றியது. உங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த நீங்கள் கொஞ்சம் சுயநலமாக இருந்தால் தவறில்லை. அந்தப் புள்ளிதான் உங்களை மாற்றும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'புஷ்பா' ராஷ்மிகாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details