தமிழ்நாடு

tamil nadu

ரீல் ஹீரோ அல்ல ரியல் ஹீரோ - ரூ. 2 கோடி நன்கொடை அளித்த அமிதாப்

By

Published : May 10, 2021, 3:45 PM IST

டெல்லி ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சந்தித்து வரும் வேளையில், அதுகுறித்து தினமும் கேட்டறிந்த அமிதாப், வெளிநாட்டில் இருந்து ஆக்சிஜன் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார். அவர் ரீல் ஹீரோ அல்ல, ரியல் ஹீரோ என குறிப்பிட்டுள்ளார்.

அமிதாப்
அமிதாப்

டெல்லி: குருதுவாரா ரகப் கஞ்ச் சாஹிப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ குரு தேஜ் பகதூர் கோவிட் பராமரிப்பு நிலையத்துக்கு ரூ. 2 கோடியை அமிதாப் பச்சன் நன்கொடையாக அளித்துள்ளார்.

இதுகுறித்த தகவலை டெல்லி சீக் குருதுவாரா மேலாண்மைக் குழு தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ஸ்ரீ குரு தேஜ் பகதூர் கோவிட் பராமரிப்பு நிலையத்துக்கு ரூ. 2 கோடி நன்கொடை வழங்கிய அமிதாப் பச்சன், சீக்கியர்களின் சேவை வணங்கத்தக்கது என தெரிவித்தார்.

டெல்லி ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சந்தித்து வரும் வேளையில், அதுகுறித்து தினமும் கேட்டறிந்த அமிதாப், வெளிநாட்டில் இருந்து ஆக்சிஜன் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார். அவர் ரீல் ஹீரோ அல்ல, ரியல் ஹீரோ என குறிப்பிட்டுள்ளார்.

கரோனா தொடர்பான நேரலை ஒன்றில் கலந்துகொண்ட அமிதாப், எனது இந்திய நாடு கரோனாவால் மோசமான பாதிப்பை சந்தித்து வருகிறது. ஒரு உலக குடிமகனாக உலக மக்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், உங்கள் அரசாங்கம், மருந்து நிறுவனங்களிடம் பேசி முடிந்த அளவு தேவை அதிகமாக உள்ள மக்களுக்கு உதவுங்கள். உங்கள் சின்ன முயற்சி கூட பலனளிக்கும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details