மும்பை: பாலிவுட்டில் கலக்கிய பிரபல நடிகர் ரன்வீர் சிங் சின்னத்திரையில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளார்.
ரன்வீர் சிங், 2010ஆம் ஆண்டு பாலிவுட்டில் நடிகராக அறிமுகமானார். இவர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

இந்தியாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் உள்ளார். 2018ஆம் ஆண்டு பிரபல நடிகை தீபிகா படுகோனை காதல் திருமணம் செய்துகொண்டார். தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கவுள்ள அந்நியன் இந்தி ரீமேக்கில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘தி பிக் பிக்சர்’ என்கிற புகைப்படங்களை கொண்ட கேள்வி - பதில் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக ரன்வீர் சிங் பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் சின்னத்திரையில் அவர் அறிமுகமாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்கப் போகிறார். ‘தி பிக் பிக்சர்’ நிகழ்ச்சி ஆகஸ்ட் முதல் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.