தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிச்சை எடுக்கும் குழந்தைகளால் சூழப்பட்ட ரகுல் பிரீத் சிங் - Rakul preet singh

மும்பை: உணவகத்திலிருந்து வெளியே வந்த நடிகை ரகுல் பிரீத் சிங், பிச்சை எடுக்கும் குழந்தைகளால் சூழப்பட்ட வீடியோ இணையதளத்தில் பரவி வருகிறது.

பிச்சை எடுக்கும் குழந்தைகளால் சூழப்பட்ட ரகுல் பிரீத் சிங்

By

Published : Jul 7, 2019, 2:08 PM IST

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான என்.ஜி.கே திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மும்பையில் உள்ள பிரபல உணவகத்திலிருந்து வெளியே வந்த ரகுல் பிரீத் சிங்கை, அங்குள்ள பிச்சை எடுக்கும் குழந்தைகளால் சூழப்பட்டார். ராகுல் ப்ரீத்தை வாகனத்துக்குள் ஏறவிடாமல் பணம் கேட்டு வழிமறித்தனர். மேலும் பணத்தைத் தேடுவதற்காக ரகுல் பிரீத் சிங் பைகளில் கைகளை வைத்ததால் அவர் கோபமடைந்தார்.

அவர்களிடம் இருந்து செல்ல முடியாமல் தவிர்த்து வந்த ரகுல் பிரீத், உடனடியாக அவருடன் வந்த நபரின் உதவியோடு வாகனத்துக்குள் ஏறினார். இந்த வீடியோ பதிவு இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த பலரும் ரகுல் பிரீத்துக்கு ஆதவராக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

பிச்சை எடுக்கும் குழந்தைகளால் சூழப்பட்ட ரகுல் பிரீத் சிங்

ரகுல் பிரீத் சிங் அடுத்ததாகத் தெலுங்கு திரைப்படமான மன்மதுடு 2 படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details