ஆபாச படங்களை எடுத்து சில செயலிகளில் வெளியிட்டதாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஜூலை 19ஆம் தேதி மும்பை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இவருடன் ரியான் தோர்பே என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். ஆபாசப் படங்களைத் தயாரித்து அவற்றை மொபைல் செயலி மூலம் விநியோகம் செய்ததாகவும், ஆபாச படம் விற்பனை செய்ததற்கான பணப் பரிமாற்றங்களுக்கான ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஷில்பா ஷெட்டி- ராஜ் குந்த்ரா இந்நிலையில், ராஜ் குந்த்ரா, ரியான் தோர்பே ஆகியோரை ஜூலை 27ஆம் தேதிவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆபாச பட பதிவேற்றம் விவகாரம் தொடர்பாக, ராஜ் குந்த்ராவின் மனைவியும் நடிகையுமான ஷில்பா ஷெட்டியிடம் காவல் துறையினர் அவரது வீட்டிற்கு சென்று சோதனையும் விசாரணையும் மேற்கொண்டனர். கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் விசாரணை நடந்தது.
ஷில்பா ஷெட்டி- ராஜ் குந்த்ரா அப்போது ராஜ் குந்த்ராவுக்கும் இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லையென்றும் அவர் அப்பாவி என்றும் ஷில்பா ஷெட்டி விசாரணையில் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் ராஜ் குந்த்ராவின் வியான இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து ஷில்பா ஷெட்டி விலகியதற்கான காரணம் குறித்தும் காவல் துறையினர் கேள்வியெழுப்பினர்.
மேலும் இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஹாட்ஷாட்டில் இருக்கும் வீடியோக்கள் குறித்து ஷில்பாவிடம் காவல் துறையினர் கேள்வியெழுப்பினர். அதற்கு ஷில்பா, அந்த வீடியோக்கள் அனைத்தும் காமம் சார்ந்தவை என்றும் அவை ஆபாச வீடியோக்கள் இல்லை என்றும் பதிலளித்தார்.
மேலும் பல ஓடிடி தளங்களில் இதுபோன்ற வீடியோக்கள் அதிகம் காணப்படுவதாகவும் ஹாட்ஷாட்டில் இருக்கும் வீடியோக்களைவிட மற்ற ஓடிடி தளங்களில் மிக மோசமான வீடியோக்கள் இருப்பதாகவும் ஷில்பா தெரிவித்தார்.
ஷில்பா ஷெட்டி- ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோக்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் ஆபாச வீடியோக்கள் தயாரிப்பில் எதிலும் ஈடுபடவில்லை என ஷில்பா காவல் துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்தார்.
ராஜ் குந்த்ராவின் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் ஷில்பா ஷெட்டி இருந்ததால் அவரிடம் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படிங்க: என்னை கைதுசெய்திருப்பது சட்டத்திற்குப் புறம்பானது - ராஜ் குந்த்ரா நீதிமன்றத்தில் வழக்கு