நிக் ஜோனஸ் குறித்து பதிவிட்ட பிரியங்கா, அவர் கணவராக கிடைத்ததால் நான் இந்த உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலியான பெண் என குறிப்பிட்டுள்ளார்.
என் வாழ்வின் மிகப்பெரிய மகிழ்ச்சி நீ - கணவரை புகழ்ந்த பிரியங்கா
கரோனா சூழலிலும் தன் பிறந்தநாளை சிறப்பாக மாற்றிய கணவர் நிக் ஜோனஸை புகழ்ந்து பிரியங்கா ஒரு பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், என் வாழ்வின் மிகப்பெரிய மகிழ்ச்சிக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நீ என்னை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டாய். முதலில் நான் பேச்சற்று நின்றேன், பின்பு சம்மதம் தெரிவித்தேன். அதை என் வாழ்நாளில் மறக்க முடியாது. எந்த நேரமும் என்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறாய். இந்த உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலியான பெண் நான்தான். லவ் யூ நிக் ஜோனஸ் என குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
பிரியங்கா தற்போது நெட்பிளிக்ஸின் ‘தி வொயிட் டைகர்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் ஆதர்ஷ் கௌரவ் மற்றும் ராஜ்குமார் ராவ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அரவிந்த் அடிகாவின் புக்கர் பரிசு வென்ற நாவலைத் தழுவி உருவாகும் இப்படத்தை ஈரானிய இயக்குநர் ராமின் பஹ்ரானி இயக்குகிறார்.