பாகிஸ்தானில் பெண்களின் கல்விக்காக குரல் கொடுத்தபோது இளம் செயல்பாட்டாளர் மலாலாவை தாலிபன்கள் தாக்கினர். இதையடுத்து அவரின் மீது உலக மக்களின் பார்வை திரும்பியது.
தொடர்ந்து உடல் நலம் தேறி, கடந்த 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். தொடர்ந்து, லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து வந்த மலாலா, இந்த ஆண்டு தனது படிப்பை நிறைவு செய்துள்ளார்.
இதனையொட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல், பொருளாதாரம், தத்துவம் அடங்கிய பாடப்பிரிவில் பட்டம் பெற்றதன் மகிழ்ச்சியை என்னால் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. வருங்காலம் எப்படி இருக்கப் போகிறது எனத் தெரியவில்லை. தற்போதைய சூழலில் நெட்ஃப்ளிக்ஸ், வாசிப்பு, தூக்கம் மட்டுமே எனது அன்றாட செயல்களாக உள்ளன'' எனப் பதிவிட்டிருந்தார்.