தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிரியங்காவின் பிகினி உடை- மீண்டும் வெடித்த சர்ச்சை! - bigini dressing'

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கணவருடன் பிகினி உடையில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

2

By

Published : Jul 9, 2019, 4:15 PM IST

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இந்திய சினிமாவில் இருந்து ஹாலிவுட் சென்று சாதித்து காட்டினார். இதனையடுத்து அமெரிக்க பாப் பாடகர், நடிகருமான நிக் ஜோனாஸை திருமணம் செய்துக்கொண்டார். திருமணம் செய்த நாள் முதல் இன்று வரை சர்ச்சையில் சிக்காத நாள் இல்லை. நெட்டிசன்கள் இவர் அணிந்து வரும் ஆடைகளை பலவிதமாக கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது கணவருடன் இத்தாலி சென்றுள்ள பிரியங்கா இத்தாலியின் டுகேன்சிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் நீச்சல் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அவர் புகைப்படத்தை வெளியிட்ட சில நொடிகளில் ஆயிரம் லைக்குகளை பெற்றாலும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காரணம் அவர் பிகினி உடையில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டதுதான் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details