நடனத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் பிரபு தேவா. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்கிறார். அண்மையில் இவரது நடிப்பில் வெளிவந்த தேவி -2 திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. 'பொன் மாணிக்கவேல்', 'யங் மங் சங்', ஆகிய படங்களில் நடித்து வருகிறார். படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே மீண்டும் இந்திக்கு சென்ற பிரபு தேவா, சல்மான் கானை வைத்து 'டபாங் 3' படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் பணிகள் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2008ஆம் ஆண்டு போக்கிரி ரீமேக்கான 'வான்டட்' படத்தில் சல்மான் கானை வைத்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். இப்படம் சல்மான் கானின் சினிமா கெரியரில் முக்கியமான படமாக இருந்தது. எட்டு வருடங்களுக்கு பிறகு பிரபு தேவா -சல்மான் கான் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.