பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாலிவுட் நடிகை பாயல் ’Me too’ இயக்கத்தின் கீழ் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
ஆனால் அவரது குற்றச்சாட்டை அடுத்து, அதற்கு நேரெதிராக அவரது முன்னாள் மனைவியும் நடிகையுமான கல்கி கோச்சலின், பாலிவுட் நடிகைகள் ராதிகா ஆப்தே, சுர்வீன், டிஸ்கா சோப்ரா, இயக்குநர் அனுபவ் சின்ஹா எனப் பலரும் ”அனுராக் அப்படிப்பட்டவர் அல்ல, அவர் ஒரு பெண்ணிடம் ஒருபோதும் அத்துமீறி நடக்க மாட்டார்” எனக் கூறி திரையுலகைச் சேர்ந்த பலரும் பதிவுகளிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தான் இந்த விஷயத்தை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள உள்ளதாக தனது வழக்கறிஞர் பிரியங்கா கிமானி மூலம் அனுராக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அனுராக்கின் வழக்கறிஞர் பிரியங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தன்னைப் பற்றி சமீபத்தில் வலம் வரும் அவதூறுகளால் அனுராக் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை, நேர்மையற்றவை.