தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கனவுகாணத் துணியும் ஒவ்வொரு பெண்ணுக்கும் 'தலைவி' கங்கனா ரணாவத்தின் அர்ப்பணம்...! - ஆலியா பட்

கனவு காணத் துணியும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது பத்மஸ்ரீ விருதை அர்ப்பணிப்பதாக நடிகை கங்கனா ரணாவத் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Kangana Ranaut
Kangana Ranaut

By

Published : Jan 26, 2020, 10:39 PM IST

கலைத்துறையில் சிறந்த விளங்கியதற்காக நடிகை கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசியல், கலை, அறிவியல், விளையாட்டு, சமூக சேவை உள்ளிட்டவைகளுக்காக பத்ம விருதுகள் வழங்கி கௌரவித்துவருகிறது. 2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மத்திய அரசால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் பத்ம விபூஷண் விருதானது ஏழு பேருக்கும், பத்ம பூஷண் 16 பேருக்கும், பத்மஸ்ரீ 118 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் நடிகை கங்கனா ரணாவத்துக்கு பத்ம ஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கங்கனா ரணாவத் கூறுகையில், 'இந்த அங்கீகாரம் அளித்த இந்திய நாட்டிற்கு நன்றி கூறுகிறேன். கனவு காணத் துணியும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இதை அர்ப்பணிக்கிறேன்' என்றார்.

இதனையடுத்து பங்கா பட இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி கங்கனாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பாலிவுட் முன்னணி நடிகை ஆலியா பட் பூங்கொத்து அனுப்பி கங்கனாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தற்போது கங்கனா மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகிவரும் 'தலைவி' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதையடுத்து தலைவி படக்குழுவினருடன் கங்கனா ரணாவத் கேக் வெட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் வாசிங்க: அரவிந்த் சுவாமியை எம்ஜிஆராக மாற்றிய அந்த நபர்...!

ABOUT THE AUTHOR

...view details