பாலிவுட்டின் பிரபல முன்னணி நடிகைகளுள் ஒருவர் 'குயின்' கங்கனா ரனாவத். எப்போதும் தனது கருத்துக்களை துணிச்சலாகப் பேசும் இவர், சுஷாந்தின் மரணத்திற்குப் பிறகு பாலிவுட்டில் நிலவி வரும் வாரிசு அரசியல் குறித்து கடுமையாக விமர்சித்து குரல் எழுப்பி வருகிறார்.
மேலும் சமூக வலைத்தளத்தில் பாலிவுட்டில் வாரிசு பிரபலங்கள் குறித்தும் பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியலுக்கு எதிராகவும் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டுவருகிறார்.
இன்று (ஆகஸ்ட் 24) ட்விட்டரில் #Boycott_Kangana என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டாகி வந்தது. இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் விதமாக கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில், “எலிகள் அவற்றின் துளைகளிலிருந்து வெளியே வருகின்றன, பாலிவுட் மாஃபியா தன்னால் முடிந்த அனைத்தையும் முயற்சிக்கும். உங்களின் இந்த அச்சுறுத்தலுக்கு நான் பயப்படவில்லை. புதிதாக ஏதாவது செய்யுங்கள்” என பதிவிட்டு புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
மாஃபியாவின் அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டேன் - 'ஜான்சி ராணி' கங்கனா ரனாவத் - பாலிவுட் குயின்
மும்பை: மாஃபியாவின் அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டேன் என 'ஜான்சி ராணி' கங்கனா ரனாவத் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
கங்கனா ரனாவத்
இது குறித்து கங்கனா கூறுகையில், “இது அன்பால் இணைந்த கூட்டம். மூவி மாஃபியாக்கள் இப்போது புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன். உங்களின் பாசம் என் இதயத்தை நன்றி உணர்வுடன் நிரப்புகிறது” எனப் பதிவிட்டிருந்தார்.