தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிரியங்காவுக்கு கணவர் கொடுத்த கிஃப்ட் -வைரல் புகைப்படம் - பிரியங்கா சோப்ரா

பிரபல பாடகர் நிக் ஜோனஸ் தனது காதல் மனைவி பிரியங்கா சோப்ராவிற்கு வாழ்வில் மறக்க முடியாத இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா

By

Published : May 26, 2019, 1:48 PM IST

Updated : May 26, 2019, 2:16 PM IST

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் பிரியங்கா சோப்ரா. நடிகை, பாடகி, படத்தயாரிப்பாளர், சமூக ஆர்வலர் என பன்முகத்தன்மைக் கொண்டவராவார். பாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்த பிரியங்கா, ஹாலிவுட்டிலும் ஜொலிக்க ஆரம்பித்தார்.

நிக் ஜோனஸை திருமணம் செய்வதற்கு முன்பே பல விமர்சனங்களை சந்தித்தவர். இதனைத்தொடர்ந்து வெற்றிகளையும் தோல்விகளையும் சுமந்து பெண்ணாக வெற்றிபெற்ற பிரியங்கா தனது நீண்ட நாள் காதலர் நிக் ஜோனஸை 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

அப்பொழுதும் தன்னை விட சின்ன வயது இளைஞனை திருமணம் செய்கிறார் என்றும் விமர்சிக்கப்பட்டார். நிக் ஜோனஸ், பிரியங்கா சோப்ராவை பல ஊடகங்கள் பலவிதமாக விமர்சித்தாலும் இருவருக்குள்ளும் இருக்கும் ஆழமான புரிதல், அன்பு, காதலாக நீடித்துவருகிறது.

பல தடைகளைத் தாண்டி வாழ்ந்துவருகின்றனர். இந்நிலையில், பிரியங்கா சோப்ரா -நிக் ஜோனஸ் தம்பதி காதலித்து ஒரு வருடத்தை எட்டியுள்ள நிலையில், நிக் ஜோனஸ் தனது மனைவியை விட்டு தூரத்தில் இருந்தாலும் பிரியங்காவிற்கு பிடித்த பிரபல பாடகி மரியா கரேவை அறிமுகம் செய்துள்ளார்.

இந்நிலையில், பிரியங்கா சோப்ரா பாடகியாக மரியா கரேவுடன் கொண்டாடி மகிழ்ந்தார். தற்போது பிரியங்கா சோப்ரா மரியா கரேவுடன் இருக்கும் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேலும், 'தனது வாழ்வில் மறக்க முடியாத தருணம் இது. காதல் கணவர் நிக் ஜோனஸுக்கு அன்பு நிறைந்த நன்றி' என்று பிரியங்கா தெரிவித்துள்ளார்.

Last Updated : May 26, 2019, 2:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details