தென்னிந்திய திரையுலகில் பிசி ஷெடியூலில் பல ஆண்டுகளாக வலம் வந்துகொண்டிருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்து தொடர்ந்து உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். ரஜினி, அஜித், விஜய், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடனும் நயன்தாரா கைகோர்த்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு விஜய்-நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் பிகில் திரைப்படமும் நயன்தாரா ரசிகர்களுக்கு விருந்தாக அமையக் காத்திருக்கிறது. இதனிடையே, பாலிவுட் நட்சத்திரம் கத்ரினா கைஃப் நயன்தாரவுடன் இருக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கத்ரீனா கைஃப் பாலிவுட் சினிமா நடிப்பில் ஒருபுறம் கவனம் செலுத்தி வரும் நிலையில், சொந்தமாகவும் பிஸினஸ் செய்து வருகிறார். 'கே' என்ற மேக்கப் பிராண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ள அவர், அதற்கான புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது, 'கே' மேக்கப் பிராண்டின் விளம்பர பணிகளுக்காக நடிகை நயன்தாராவை போட்டோ ஷுட்டிற்கு அழைத்திருந்தார். இந்தப் பணிகள் நிமித்தமாக நயன்தாரா மும்பைக்குச் சென்றுள்ளார்.