வேல்ஸ், கார்டிஃபில் நடைபெறும் கார்டிஃப் சர்வதேச திரைப்பட விழாவில் (Cardiff International Film) நவாசுதின் சித்திக்கிற்கு ‘கோல்டன் டிராகன் விருது’ (Golden Dragon Award) வழங்கப்பட்டது. வேல்ஸ் நாட்டின் கவுன்சிலர் ஜெனரல் மிக் அந்தோனி இந்த விருதினை வழங்கினார். திரைத் துறையில் சிறப்பாகப் பங்காற்றியமைக்காக நவாசுதினுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
நவாசுதின் சித்திக்குக்கு சர்வதேச விருது! - Cardiff International Film
கார்டிஃப் சர்வதேச திரைப்பட விழாவில் (Cardiff International Film) நவாசுதின் சித்திக்கிற்கு ‘கோல்டன் டிராகன் விருது’ (Golden Dragon Award) வழங்கப்பட்டுள்ளது.
cardiff-international-film-festival
இந்த விழாவில் ‘ஜேம்ஸ் பாண்ட் 007’ பிரபலம், பழம்பெரும் நடிகை ஜூடி டென்ச்சுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இது குறித்து நவாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் ரஜினியின் ‘பேட்ட’ படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.