திரைத்துறையில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக தனது பங்களிப்பை செலுத்திவரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் நசிருதீன் ஷா. இவர் மூன்று முறை தேசிய விருது பெற்றவர். இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாது ’பாந்திஷ் பாண்டிட்ஸ்’ என்ற வெப் சீரிஸிலும் நடித்து டிஜிட்டல் தளத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்.
தனது திரையுலக வாழ்க்கை குறித்து நசிருதீன் ஷா முன்னதாகத் தெரிவிக்கையில், ”என் வாழ்க்கையில் ஒரு சின்ன வருத்தம்கூட எனக்கில்லை. நான் தவறுகள் செய்திருக்கிறேன். ஆனால் அவற்றைக் கடந்து வந்துவிட்டேன். அவற்றிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேறியிருக்கிறேன்.
என் வாழ்க்கையில் வருத்தம் என்று ஏதாவது வைத்திருந்தால் நான் ஒரு முட்டாள். மிக மோசமான சில படங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் நடிக்கும்போது எனக்கு திருப்தி இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் நடித்ததில் வருத்தமில்லை. எனது ஒவ்வொரு முடிவுமே எனக்கு ஏதோ ஒரு விஷயத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.