தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அதிக பார்வையாளர்களை கொண்ட சிபி சத்யராஜின் 'நாய்கள் ஜாக்கிரதை'

நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் வெளியான, 'நாய்கள் ஜாக்கிரதை' திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு அதிகபட்ச பார்வையால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனை புரிந்துள்ளது.

நாய்கள் ஜாக்கிரதை
நாய்கள் ஜாக்கிரதை

By

Published : Jun 21, 2020, 3:27 PM IST

சத்யராஜின் சொந்தப் பட நிறுவனமான நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரித்த 'நாய்கள் ஜாக்கிரதை' படம், சிபி சத்யராஜுக்கு திருப்பு முனை ஏற்படுத்திய படமாகும். வணிக ரீதியில் பெரும் வெற்றி பெற்ற படம்.

இப்படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டதென்றாலும், குழந்தைகளுக்கும், செல்ல நாய்களை வளர்ப்பவர்களுக்கும் இன்று வரை மனதுக்கு நெருக்கமான படமாகவே இது இருந்து வருகிறது.

நல்ல கதையம்சம் உள்ள படங்கள் மொழியின் தடைகளையும் கடந்து புகழப்படும் என்பது மீண்டும் ஒரு முறை இப்போது நிரூபணம் ஆகியிருக்கிறது.

'போலீஸ் அவுர் டைகர்' என்ற பெயரில் இந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்ட 'நாய்கள் ஜாக்கிரதை' திரைப்படம், கடந்த வாரம் B4U கோடாக் என்னும் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அப்போது இப்படத்தை கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கும் மேலானோர் கண்டுகளித்துள்ளனர். இந்தச் சேனலில் இத்தனை பேர் படம் பார்த்திருப்பது 2 கோடி பேர் படம் பார்த்து இருக்கு சமமாகும்.

இதனையடுத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட படத்தை அதிகபட்ச பார்வையாளர்கள் கொண்ட திரைப்படம் என்னும் சாதனை படைத்துள்ளது.

சிபி ராஜின் மற்றொரு வெற்றிப் படமான 'சத்யா' யூ ட்யூபில் வெளியிடப்பட்ட பின் கடந்த ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர்.

தொடர்ந்து கதையம்சம் உள்ள படங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து சிபிராஜ் நடித்து வருவதால், அகில இந்திய அளவில் அவரது படங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details