தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பெண் குழந்தையை தத்தெடுத்த மந்திரா பேடி! - குழந்தை தத்தெடுப்பு

மும்பை : பெண் குழந்தையை தத்தெடுத்ததன் மூலம் ஆசிர்வதிக்கப்பட்டதைப் போல் தான் உணர்வதாக நடிகை மந்திரா பேடி தெரிவித்துள்ளார்.

மந்திரா பேடி
மந்திரா பேடி

By

Published : Oct 26, 2020, 7:14 PM IST

சிம்பு நடிப்பில் வெளியான 'மன்மதன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பாலிவுட் நடிகை மந்திரா பேடி. நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான 'சாஹோ' படத்தில் வில்லியாகவும் முன்னதாக மந்திரா பேடி நடித்திருந்தார்.

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட தொடரின் மூலம் முதன்முதலாக அறிமுகமான மந்திரா பேடி, அதன்பின் பாலிவுட்டில் பல வெற்றிப் படங்கள், உலகக் கோப்பை கிரிக்கெட், ஐபிஎல் கிரிக்கெட்டின் தொகுப்பாளினியாகவும் வலம் வந்துள்ளார்.

இவர் தற்போது மும்பை புறநகர் பகுதியில் தனது கணவர் இயக்குநர் ராஜ் கவுசல், மகன் வீர் (வயது 9) ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், தற்போது நான்கு வயது சிறுமி ஒருவரை மந்திரா பேடி தத்தெடுத்துள்ளார். அக்குழந்தைக்கு தாரா பேடி கவுசல் என அவர் பெயரிட்டுள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மந்திரா பேடி கூறியுள்ளதாவது, "மேலே இருந்து ஒரு ஆசிர்வாதம் போலஅவள் எங்களிடம் வந்தடைந்திருக்கிறாள். எங்கள் சிறுமி தாரா. அவள் வயது நான்கு. அவளது கண்கள் நட்சத்திரங்களைப் போல பிரகாசிக்கின்றன.

வீருக்கு அவள் சகோதரி. திறந்த கைகள், தூய அன்புடன் வீடு அவளை வரவேற்கிறது. மிக்க நன்றியுடன் ஆசிர்வதிக்கப்பட்டவளாக நான் உணர்கிறேன். இந்த ஆண்டு ஜூலை 28ஆம் தேதி எங்கள் மகள் எங்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாகி விட்டாள்" எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவுடன் மந்திரா தனது கணவர், மகன் வீர், மகள் தாராவுடன் குடும்பமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details