ஹைதராபாத்: தில்வாலே (2015) படத்துக்கு பிறகு வருண் தவானுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து கிரிட்டி சனான் கருத்து தெரிவித்துள்ளார்.
அவருக்கு திருமணம் முடிந்துவிட்டது; அவ்வளவுதான் - கிரிட்டி சனான் - கிரிட்டி சனான்
‘தில்வாலே’ படத்தில் பணியாற்றிய வருண் - கிரிட்டி இப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சிரோ, அருணாச்சல பிரதேசம் ஆகிய இடங்களில் நடைபெற்று முடிந்தது.
இயக்குநர் அமர் கௌசிக் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘பேடியா’. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ‘தில்வாலே’ படத்தில் பணியாற்றிய வருண் - கிரிட்டி இப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சிரோ, அருணாச்சல பிரதேசம் ஆகிய இடங்களில் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், வருண் தவானுடனான நட்பு குறித்து கிரிட்டி சனானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், நாங்கள் இணைந்து பணியாற்றி 6 ஆண்டுகள் ஆகிறது. நாங்கள் இருவருமே நடிகராகவும் தனிநபராகவும் நல்ல வளர்ச்சி கண்டுள்ளோம். அவருக்கு தற்போது திருமணமாகிவிட்டது, அவ்வளவுதான், மற்றபடி அவர் மாறவில்லை. பேடியா திரைப்படம் சிறந்த நகைச்சுவை படமாக இருக்கும், எங்கள் இருவருக்குமே இதில் கடந்த படத்தை காட்டிலும் வித்தியாசமான கதாபாத்திரம் என தெரிவித்துள்ளார்.