2018ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களில் சினிமா ரசிகர்களை தாண்டி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த படம் கேஜிஎப். கன்னட சினிமாவில் இப்படியொரு பிரமாண்ட படைப்பை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். காட்சிக்கு காட்சி ராக்கியின் ரத்தம் தெறிக்கிற சண்டைகளை கண்டு பிரமித்து போனார்கள். இப்படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் மாபெரும் வெற்றி பெற்று 100 கோடி ரூபாய் வசூலை பெற்ற முதல் கன்னட படம் என்ற பெருமையை பெற்றது. கதையின் நாயகனாக வரும் யஷ் அசாத்திய நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். படம் முழுக்க ஒரு நடிகரின் பிம்பத்தை தாங்கி கதைக்களம் கமர்ஷியல் வெற்றியை தொட்டது.
பக்கா மாஸ் காட்டும் கேஜிஎப் வில்லன்! தெறி போஸ்டர்! - villain role
கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தில் ராக்கியை எதிர்த்து சண்டையிடும் பவர்புல் வில்லனாக சஞ்சய் தத் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் புதிய போஸ்டர் வலைதளத்தை கலக்கி வருகிறது.
இப்படத்தின் முதல் பாகம் அதிரடியான வெற்றி முத்திரையை பதித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் கருடன் கொல்லப்பட்டதற்கு பின்பு நடக்கும் கதையாக உருவாகிறது. இதில் கருடனின் அண்ணனாக பிரபலமானவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதை கேஜிஎப் படக்குழு பூர்த்தி செய்துள்ளது. கேஜிஎப் ராக்கியை எதிர்த்து சண்டையிடும் பவர்புல் வில்லனாக சஞ்சய் தத் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தில் டானுக்கே வித்தை காட்டும் ஆதிரா கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
சஞ்சய் தத்தின் கெட்டப் வலைதளத்தில் வைரலாகி வருகிறது. படம் பார்க்கும் முன்பே ஆதிராவை வீழ்த்தி எப்படி தங்கக் கோளாறை கைப்பற்றுவார் ராக்கி என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் நிச்சயம் வசூல் சாதனை புரியும் என்று சாண்டல்வுட் திரையுலகினர் தெரிவித்துள்ளனர். இயக்குநர் பிரசாந்த் நீல் முதல் பாகம்போல் விறுவிறுப்பான காட்சிகளை அமைத்து வருகிறார். சஞ்சய் தத் அக்னிபத் படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.