தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 21, 2022, 4:57 PM IST

ETV Bharat / sitara

KGF Chapter 2: இணையத்தை கலக்கும் லிரிக்கல் பாடல்!

கேஜிஎஃப் இரண்டாம் பாகம் படத்தின் லிரிக்கல் பாடல் ஒன்று வெளியான வேகத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

KGF
KGF

ஹைதராபாத் : கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தில் பாடலாசிரியர் ஷபீர் அஹமது (Shabbir Ahmed) எழுதியுள்ள லிரிக்கல் பாடல் ஒன்று யூடியூப்பில் வெளியாகி உள்ளது. இந்தப் பாடலுக்கு ரவி பஸ்ரூர் ( Ravi Basrur) இசையமைத்துள்ளார்.

ஆக்ஷன் திரில்லர் படமான வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் கேஜிஎஃப். யாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் லிரிக்கல் பாடல் ஒன்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள படத்தின் டிரெய்லர் மார்ச் 27ஆம் தேதி வெளியாகிறது.

கன்னடா, தெலுங்கு, இந்தி, தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா தாண்டன் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளளர்.

கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தை வட இந்தியாவில் ரிதேஷ் ஷித்வானி-ஃபர்கான் அக்தர் எக்ஸெல் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஏஏ ஃப்லிம்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.

இதையும் படிங்க : கேஜிஎப் பட வசனத்திற்கு கத்தியைச் சுழற்றி நடித்த இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details