தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இந்தியில் ’அலா வைகுந்தபுரமுலோ’: படப்பிடிப்பு தொடக்கம் - அலா வைகுந்தபுரமுலோ இந்தி ரீமேக்

அல்லு அர்ஜுனின் ’அலா வைகுந்தபுரமுலோ’ படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு இன்று (அக்.13) தொடங்கியுள்ளது.

Kartik
Kartik

By

Published : Oct 13, 2021, 7:00 PM IST

திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ’அலா வைகுந்தபுரமுலோ’ (Ala Vaikunthapurramloo).

இதில் தபு, ஜெயராம், நிவேதா பெத்துராஜ், நவ்தீப் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.

இப்படத்திலிருந்து வெளியான ‘சாமஜவரகமனா’ (Samajavaragamana) 'ராமுலோ ராமலா' (Ramuloo Ramulaa) 'புட்ட பொம்மா' (Buttabomma) என்ற பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதில் 'புட்டபொம்மா' பாடலுக்கு சமூகவலைதளத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர் வரை டிக் டாக் செய்த வீடியோ வைரலானது. 2020ஆம் ஆண்டு வெளியான ’அலா வைகுந்தபுரமுலோ' படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.

'ஷெஸாடா' படக்குழு

தற்போது இந்தப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. ரோஹித் தவான் இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன் நடிக்கிறார். 'ஷெஸாடா' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பூஷன் குமார், கிருஷ்ணன் குமார், ராதா கிருஷ்ணா, அமன் தில், அல்லு அரவிந்த் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

’அலா வைகுந்தபுரமுலோ’ படத்தில் பூஜா ஹெக்டே நடித்த கதாபாத்திரத்தில், 'ஷெஸாடா'வில் கீர்த்தி சனோன் நடிக்கிறார். மேலும் ப்ரேஷ் ராவல், மணிஷா கொய்ராலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நீண்ட நாள்களாக முன் தயாரிப்பு பணியில் இருந்த இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

ஒரே கட்டமாக இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. 'ஷெஸாடா' 2022ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: அல்லு அர்ஜூன் படத்தில் அர்ஜூன் ரெட்டி 2 ரெபரென்ஸ்

ABOUT THE AUTHOR

...view details