பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் காரணமாகத்தான் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறி பல்வேறு முன்னணி பாலிவுட் பிரபலங்களுடன் கங்கனா ரனாவத் கருத்து மோதலில் ஈடுபட்டார்.
அதன்பின், பாலிவுட் மாஃபியாக்கள், பாலிவுட்டில் பயன்படுத்தப்படும் போதைப் பொருள்கள் என தொடர்ச்சியாக கங்கனா அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். இதனைத் தொடர்ந்து, மும்பை காவல் துறை, மகாராஷ்டிரா மாநிலம், சிவசேனா கட்சி என அனைத்து தரப்பினரையும் கங்கனா கடுமையாக சாடத் தொடங்கினார்.
பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியலுக்கு எதிராக கங்கனா குரல் கொடுக்கத் தொடங்கிய நிலையில், தற்போது சிவசேனா-கங்கனா என முற்றி சமூக வலைதளங்களில் விவாதங்கள் போய்க்கொண்டிருக்கின்றன.
’பாக்கத்தானே போறேன்!’ - உத்தவ் தாக்கரேவை மீண்டும் சாடிய கங்கனா - kangana vs uddhav
மும்பை : கங்கனா ரனாவத் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில், மும்பை பந்த்ராவில் உள்ள கங்கனாவின் அலுவலகம், வீட்டின் பெரும்பகுதிகள் விதிமீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி மும்பை மாநகராட்சி ஆணையம் இடித்தது.
மும்பையில் இருந்து இன்று (செப்.14) தனது சொந்த ஊரான மணாலிக்குத் திரும்பிய கங்கனா, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மகாராஷ்டிரா முதலமைச்சரின் முக்கியப் பிரச்னை என்னவென்றால், நான் திரைப்பட மாஃபியாவையும், சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலைகாரர்களையும், போதைப் பொருள் மோசடியையும் குறித்து அம்பலப்படுத்தினேன் என்பதுதான்.
இதற்குப் பின்னால் அவருடைய அன்பு மகன் ஆதித்யா தாக்கரே உள்ளார். இதுதான் நான் செய்த மிகப்பெரிய குற்றம் என அவர்கள் கருதுகின்றனர். எனவேதான் அவர்கள் என்னை சரிசெய்ய முயற்சிக்கின்றனர். சரி... பார்ப்போம்... யார் யாரை சரி செய்கிறார் என்று!" என ட்வீட் செய்துள்ளார்.