தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இந்திரா காந்தியான தலைவி! - Indira Gandhi

எமர்ஜென்சி படத்துக்கு தயாராகிறார் கங்கனா ரணாவத். முன்னதாக, இவரின் நடிப்பில் தலைவி படம் விரைவில் வெளியாகிறது.

Indira Gandhi
Indira Gandhi

By

Published : Jun 23, 2021, 5:02 PM IST

ஹைதராபாத்: தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவியை முடித்த கையோடு, மறைந்த பிரதமர் இரும்பு பெண்மணி இந்திரா காந்தியாக அரிதாரம் பூச தயாராகிவிட்டார் கங்கனா ரணாவத்.

எமர்ஜென்சி (அவசர நிலை) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் தற்போது தொடங்கிவிட்டன. இந்தப் படத்தில் பிரதமர் இந்திரா காந்தியாக கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

எனினும் இது இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று படமல்ல. மாறாக அவர் பிரதமராக இருந்த காலகட்டத்தில் நடந்த சில வரலாற்று சம்பவங்களின் அடிப்படையில் படம் தயாராகிறது. முன்னதாக எமர்ஜென்சி படத்தில் கங்கனா நடிப்பதை உறுதிசெய்திருந்தார்.

இந்திரா காந்தியான தலைவி!

படத்தை சாய் கபீர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே 2014ஆம் ஆண்டு கங்கனா ரணாவத் நடித்திருந்த ரிவால்வர் ராணி என்ற படத்தில் பணியாற்றியுள்ளார். தற்போது கங்கனா ரணாவத் நடிப்பில் தாக்கத் என்ற படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. உளவாளி த்ரில்லர் கதையாக உருவாகியிருக்கும் தாக்கத் படத்தில் கங்கனா ஏஜென்ட் அக்னியாக நடித்துள்ளார்.

படத்தில் ராம்பால் ருத்ரவீர் என்ற கதாபாத்திரத்தில் வருகிறார். இந்தப் படம் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீசாகிறது. முன்னதாக கங்கனா ரணாவத்தின் தலைவி மற்றும் தேஜஸ் உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன.

இதையும் படிங்க: ‘தலைவி’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தேம்பி தேம்பி அழுத கங்கனா!

ABOUT THE AUTHOR

...view details