மறைந்த நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மகள் குஷி கபூர், அமெரிக்காவின் நியூயார்க் ஃபிலிம் அகாடமியில் பயின்று வருகிறார். இந்த நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக மும்பைக்கு வருகை தந்துள்ளார்.
குஷியை விமானநிலையம் சென்று அவரது தந்தை போனி கபூர் வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில், அங்கு அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், குஷி கபூரின் சகோதரியும் நடிகையுமான ஜான்வி கபூர் ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீருடன் வரவேற்றுள்ளார்.
மேலும், அந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ''FINALLY'' என பதிவிட்டு அழும் வகையிலான எமோஜிக்களையும் இணைத்துள்ளார்.