மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள், ஜான்வி கபூர் கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியில் வெளியான 'தடக்' படம் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இவர் நடித்த 'கோஸ்ட் ஸ்டோரீஸ்' படம் வெளியானது. இவர் உடல் மீது அதிக அக்கறை செலுத்தக்கூடிய ஜான்வி, ஜிம் பயற்சியும் மேற்கொண்டுவருகிறார்.
ஜிம், படங்கள் என எப்போதும் பிஸியாகவே ஜான்வி இருந்துவருகிறார். இதற்கிடையில் ஜான்வி கபூரும், அர்ஜுன் கபூரும் இணைந்து கொல்கத்தாவில் நடைபெற்ற 'Prestigious Golf Course' என்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.