பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் இயான் ஃபிளெமிங் என்பவரால் 1952 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உளவாளி கதாபாத்திரம் இந்த ஜேம்ஸ் பாண்ட். ஜேம்ஸ் பாண்ட் என்ற பெயரை ஃபிளெமிங் தேர்வு செய்தததற்கான காரணம் மிகவும் சுவையானது. ஜேம்ஸ் பாண்ட் அமெரிக்காவைச் சேர்ந்த பறவைகள் ஆய்வாளர் ஆவார்.
நாம் பார்ப்பதுபோல் அவர் சாகசங்கள் செய்யும் உளவாளி கிடையாது. கரீபியன் பகுதியில் பறவைகள் குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த இந்த ஜேம்ஸ் பாண்ட்டின் பல ஆய்வுக் கட்டுரைகளை ஃபிளெமிங் படித்திருக்கிறார்.
ஃபிளெமிங், தான் எழுதிய கதையின் கதாநாயகனின் பெயர் மிகச் சாதாரணமாக இருக்க வேண்டும் என்று விரும்பியதால், சாதுவான ஒருவரான ஜேம்ஸ் பாண்ட் என்பவரின் பெயரைத் தேர்வு செய்துள்ளார்.
முதல் ஜேம்ஸ் பாண்ட்
டாக்டர் நோ (1962) திரைப்படத்தில் பாண்டாக நடித்த முதல் நடிகர் சீன் கானரி. ஒரு ஸ்காட்லாந்து பாடிபில்டர், அவர் 1950 களின் பிற்பகுதியிலிருந்து பிரிட்டிஷ் படங்களில் தோன்றிய பிறகுதான் ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட தயாரிப்பாளர்களின் கவனத்திற்கு வந்தார்.
ஜார்ஜ் லேசன்பி:
1962ஆம் ஆண்டு முதல் 1967ஆம் ஆண்டுவரை ஜேமஸ் பாண்டாக இருந்த சீன் கானரி, படத்திலிருந்து விலகிய பிறகு யாரை பாண்டாக நடிக்கவைப்பது என படக்குழுவினர் தேடி வந்தனர்.
அப்போது, 'ஒன் ஹேர் மேஜஸ்ட்டி சீக்ரெட் சர்வீஸ்' படத்தின் தயாரிப்பாளர், ஜார்ஜ் லேசன்பியா என்பவரை முடி திருத்தும் கடையில் பார்த்துள்ளார். பின்னர் அவரை அழைத்து டெஸ்ட் ஷூட் செய்து பார்த்ததில் அவரை பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தனர்.
படப்பிடிப்பு நடைபெற்றபோது, தயாரிப்பாளர் அவரை மூளை இல்லை எனத் திட்டியதாகக் கூறப்படுகிறது. அதனால் அவர் தொடர்ந்து பாண்ட் படத்தில் நடிக்கவில்லை என கூறி படத்திலிருந்து விலகினார்.
ரோஜர் மூர் பயணம்:
நடிகர் ரோஜர் மூர் 1973 முதல் 1985 வரை லைவ் அண்ட் லெட் டை (1973), தி மேன் வித் தி கோல்டன் கன் (1974), தி ஸ்பை ஹூ லவ் மீ (1977) ), மூன்ராக்கர் (1979), ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி (1981), ஆக்டோபுஸி (1983), எ வியூ டு எ கில் (1985) என 7 படங்களில் நடித்து நீண்ட கால ஜேம்ஸ் பாண்டாக இருந்துள்ளார். கோல்டன் ஐ படத்திற்கு முன்பு, அதுவரை வந்த படங்களிலேயே மூன்ராக்கர் படம்தான் அதிக வசூலை பெற்றது.
திமோதி டால்டன்:
தி லிவிங் டயலைட்ஸ் (1987), லைசென்ஸ் டு கில் (1989) ஆகிய இரண்டு படங்களில் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் திமோதி டால்டன். இவரது நடிப்பு விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும், பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை குவிக்கவில்லை. 1984ஆம் ஆண்டு முதல் 1994வரை இவர்தான் ஜேம்ஸ் பாண்டாக இருந்தார்.