தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

யோகா விடியோக்களால் ரசிகர்களை சூடேற்றிய ஜாக்குலின் - ஜாக்குலின் யோகா விடியோக்கள்

யோகாவுடன் இந்த வாரத்தை தொடங்கியுள்ள நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், அதன் நன்மைகளை விவரித்து விடியோவை வெளியிட்டுள்ளார்.

Jacqueline sets Insta afire with hot yoga videos
Actress Jacqueline Fernandez

By

Published : Mar 17, 2020, 9:28 AM IST

மும்பை: யோகா செய்யும் விடியோவை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார் பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்.

பாலிவுட் நடிகைகளுள் ஒருவராகத் திகழும் ஜாக்குலின், தனது கட்டுக்கோப்பான உடல் அமைப்பால் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். உலகம் முழுவதும் கரோனா பீதி தொற்றிக்கொண்டிருக்க, சினிமா பிரபலங்கள் பலரும் அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான யோசனைகளை மாறி மாறி வழங்கி வருகின்றனர்.

இதனிடையே, யோகா பயிற்சியுடன் இந்த வாரத்தை தொடங்கியுள்ள நடிகை ஜாக்குலின், அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தனது பயிற்சி விடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Jacqueline hot yoga look

பிங்க் நிற குட்டைப் பாவாடை அணிந்து யோகா பயிற்சி மேற்கொண்ட அவர், தனது ஃபேவரிட் யோகா போஸ் என்று குறிப்பிட்டு, உடலை பாம்பு போல் வளைத்து கை, கால்கள் மற்றும் இதர உடற் பகுதிகளை விரிவுபடுத்தி பயிற்சி மேற்கொள்ளும் விடியோவை வெளியட்டுள்ளார்.

இதில், "உடல் விரிவு பயிற்சி. உங்களது முதுகு தண்டுவாளத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும். எங்கு சென்றாலும் இதுதான் என் ஃபேவரிட் யோகா போஸ்" என்று பதிவிட்டுள்ளார்.

Jacqueline hot yoga look

இதேபோல் தரையில் அமிர்ந்தவாறு ஆழ்ந்து சுவாசிக்கும் விடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ள ஜாக்குலின், "நல்ல இதமான இசையை ஒலிப்பதை உறுதி செய்த பின், ஆழ்ந்து சுவாசியுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜாக்குலினின் இந்த யோகா விடியோக்களுக்கு நெருப்பு, காதல் பறக்கும் எமோஜிகளுடன் ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸை நிரப்பியுள்ளனர்.

Jacqueline hot yoga look

ஜான் ஆபிரகாம் ஜோடியாக 'அட்டாக்' என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜாக்குலின். சமீபத்தில் பிக் பாஸ் 13 புகழ் ஆஷிம் ரியாஸுடன் இணைந்து இவர் தோன்றிய இசை ஆல்பம் ஒன்று வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இதையும் படிங்க: ரஜினி வழியில் ஜாக்குலின்!

ABOUT THE AUTHOR

...view details