தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விஜய் தேவரகொண்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் அப்டேட்! - விஜய் தேவரகொண்டா

ஆக்சன் திரைப்படமாக உருவாகிவரும் இதற்காக விஜய் தேவரகொண்டா தாய்லாந்து சென்று தற்காப்புக் கலை பயிற்சி எடுத்துக்கொண்டார். இந்தப் படத்தின் பெயர் ‘ஃபைட்டர்’ என ஒரு வதந்தி பரவிவந்தது குறிப்பிடத்தக்கது.

Vijay Deverakonda'
Vijay Deverakonda'

By

Published : Jan 17, 2021, 4:57 PM IST

ஹைதராபாத்: பூரி ஜகநாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனான்யா பாண்டே ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதமே இந்தப் படம் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. கரோனா காரணமாக படப்பிடிப்பு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது படத்தை பற்றிய அப்டேட்டுடன் படக்குழு வந்துள்ளது.

விஜய் தேவரகொண்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் அப்டேட்!

கரண் ஜோகர் தயாரிக்கும் இத்திரைப்படம் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் நாளை காலை 10.08-க்கு வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆக்சன் திரைப்படமாக உருவாகிவரும் இதற்காக விஜய் தேவரகொண்டா தாய்லாந்து சென்று தற்காப்புக் கலை பயிற்சி எடுத்துக்கொண்டார். இந்தப் படத்தின் பெயர் ‘ஃபைட்டர்’ என ஒரு வதந்தி பரவிவந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details