சீனாவின் வூஹான் நகரில் தோன்றியதாகக் கூறப்படும் கோவிட்-19 (கரோனா) என்ற வைரஸ் தொற்று, தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. கடந்தாண்டு டிசம்பர் இறுதியில் பரவத் தொடங்கிய, இந்தத் தொற்று காரணமாக உலகளவில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து பிரபலங்கள் பலரும் தங்களது அனைத்து வித படப்பிடிப்பு, நிகழ்ச்சிகள், பயணங்கள், ஃபேஷன் வீக் போன்றவற்றை ரத்து செய்து வீட்டில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் தீபிகா படுகோனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது அலமாரியில் (wardrobe) உள்ள ஆடைகளை அனைத்தையும் வெளியே எடுத்து சுத்தப்படுத்தும் பணிகளை செய்து வரும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். பாரீஸில் நடைப்பெற்ற இருந்த ஃபேஷன் வீக்கில் கலந்துக்கொள்ள இருந்த தீபிகா படுகோனே, கரோனா காரணமாக ரத்துசெய்தார். தற்போது முழு நேரமும் வீட்டில் இருந்துக்கொண்டு தனது நேரத்தை செலவழித்து வருகிறார்.