தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

என் வாழ்க்கையின் ஒளி ரன்வீர் - பிறந்தநாள் வாழ்த்து கூறிய தீபிகா

மும்பை: நடிகர் ரன்வீர் சிங்கின் பிறந்தநாளையொட்டி அவரது மனைவியும் நடிகையுமான தீபிகா படுகோனே தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே

By

Published : Jul 7, 2020, 8:28 PM IST

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங். இவர் இன்று( ஜூலை 7) தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவரது பிறந்தநாளுக்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ரன்வீர் சிங்கின் மனைவியும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வரும் தீபிகா படுகோனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரன்வீருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தீபிகா படுகோனே

அதில், என் வாழ்க்கையின் ஒளி. என் பிரபஞ்சத்தின் மையம். உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும், மன அமைதியும் கிடைக்க நான் விரும்புகிறேன். ஐ லவ் யூ! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.

இதனுடன் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் ரன்வீரும் தீபிகாவும் ஷாம்பெயின் கிளாஸுடன் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டு சிரிப்பது போன்று உள்ளது. இந்த புகைப்பட பகிர்வு இணையதளத்தில் 2.5 மில்லியன் லைக்குகளைப் பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details