தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சுஷாந்த் சிங் விவகாரம் - ஊடகங்களை சாடும் இந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் - Amir Khan

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக பாலிவுட் திரையுலகே மோசம் என்பது போல் சித்தரிக்க வேண்டாம் என ஊடகங்களை இந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் சாடியுள்ளது.

Filmmakers slam media
Filmmakers slam media

By

Published : Sep 5, 2020, 3:37 AM IST

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ, போதைக் பொருள் தடுப்பு துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வேளையில், ஊடகங்கள் இந்தப் பிரச்னையை வைத்து பாலிவுட் திரையுலகை தவறாக சித்தரிக்கிறது என இந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சித்தார்த் ராய் கபூரை தலைமையாக கொண்டு இயங்கும் இந்திய தயாரிப்பாளர்கள் சங்கம், நெருப்பை ஊதி பெரிதாக்கும் வேலையை ஊடகங்கள் கைவிட வேண்டும். விளம்பரம், வருவாய் என்பதை தாண்டி மனித ஒழுக்கம் என்ற ஒன்று இருக்கிறது. பாலிவுட்டை தவறாக சித்தரிக்கும் ஊடகங்கள் தங்கள் முகங்களை கொஞ்சம் கண்ணாடியில் பார்க்க வேண்டும் என விமர்சித்துள்ளது.

சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகு, இந்திய திரையுலகை ஊடகங்கள் கடுமையாக சாடியது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் திரையுலகம் போதைப் பொருள்களுக்கு அடிமைப்பட்டு கிடக்கிறது போன்ற விமர்சனங்கள் எல்லாம் முன்வைக்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details