பழம்பெரும் ஹாலிவுட் கதாநாயகியான எலிசபெத் டெய்லரின் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஏலத்திற்கு வருகிறது. அவர் உயிரோடு இருந்த காலத்தில் சுமார் 20 ஆண்டுகள் இந்தக் காரை பயன்படுத்தியுள்ளார்.
'பச்சை தேவதை' ஏலத்திற்கு வருகிறது!
ஹாலிவுட் ஹீரோயின் எலிசபெத் டெய்லர் பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கார் ஏலத்திற்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
rolls royce
எலிசபெத்தின் காரை 'பச்சை தேவதை' என்று பலரும் வர்ணிப்பர். தற்போது இந்தக் கார் ஏலத்திற்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தின் ஆரம்ப விலையை இன்னும் நிர்ணயம் செய்யவில்லை, ஆனால் இந்த ரக காரின் விலையைக் காட்டிலும் ஐந்து மடங்கு கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிற ஆகஸ்ட் 6ஆம் தேதி நியூயார்க் நகரில் உள்ள பியர்ரி ஓட்டலில் இந்த ஏலம் நடைபெறவுள்ளது. எலிசபெத் இந்தக் காரை 1960ஆம் ஆண்டுகளில் பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.