தீபிகா நடித்துள்ள 'சப்பாக்' படத்தின் ட்ரெய்லர் தனது சகோதரி வாழ்க்கையில் நிகழ்ந்த கோர சம்பவத்தை நினைவுப்படுத்தியது என்று பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் தெரிவித்தார்.
ஆசிட் வீச்சால் பாதிப்புக்குள்ளான லட்சுமி அகர்வால் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 'சப்பாக்' படம் உருவாகியுள்ளது. மேக்னா குல்ஸர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் லட்சுமி அகர்வால் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார். பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சகோதரியான ரங்கோலியும் ஆசிட் வீச்சால் பாதிப்புக்குள்ளானவர். இதையடுத்து இந்தப் படத்தின் ட்ரெயல்ரை பார்த்த கங்கனா, தனது சகோதரிக்கு நிகழ்ந்த ஆசிட் வீச்சு கோர சம்பவம் நினைவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கங்கனா. அதில், இந்தப் புத்தாண்டிலிருந்தாவது ஆசிட் விற்பனை நிறுத்தப்படவேண்டும். இதுபோன்றதொரு சம்பவம் இந்தச் சமூகத்தில் இனி நிகழக்கூடாது என கடவுளை வணங்கி பிரார்த்திக்கிறேன். இந்தப் படம் குற்றம் புரிந்தவர்களுக்கு பலத்த அடியாக இருக்கிறது. ஆசிட் வன்முறை எதிராக 'சப்பாக்' படத்தை உருவாக்கியதற்காக தீபிகா, மேக்னா ஆகியோருக்கு நன்றியை தெரிவிப்பதாக வீடியோவில் கூறியிருக்கிறார். இந்த வீடியோவை கங்கனாவின் சகோதரி ரங்கோலி தனது சமூக வலைத்தளபக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.