நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி போதைப்பொருள் வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டனர். மேலும், பாலிவுட்டில் பலர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து நடிகை ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தி ஆகியோர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பிணை கோரி மனு தாக்கல் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போதைப்பொருள் தடுப்பு முகமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.
அதில், ரியா சக்ரபோர்த்தி, ஷோவிக் சக்ரவர்த்தி இருவரும் செல்வாக்கு மிக்க நபர்களுக்கு போதை மருந்து விநியோகிக்கும் கூட்டமைப்பு ஒன்றில் நீண்ட கால உறுப்பினர்களாக இருந்து வருவதாகவும், பல விநியோகிஸ்தர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் இதுகுறித்து, போதை மருந்து தடுப்பு முகமை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்தது.